Tuesday, January 23, 2018

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்

அன்று பிரித்தாளும் சூழ்ச்சியால் சிதறிக்கிடந்த இந்தியாவை ஒட்டுமொத்தமாக கைப்பற்றினார்கள் வெள்ளையர்கள்
இன்று அதே பிரித்தாளும் சூழ்ச்சியால் ஒன்றுபட்ட இந்தியாவை சிதறடக்கின்றனர் இந்தக் கொள்ளையர்கள்
மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அரசனிடம் முறையிடலாம், அந்த அரசனே பிரச்சனை என்றால் யாரிடம் சென்று முறையிடுவது
திக்கற்றோர்க்கு தெய்வமே துணை.
இறைவா எங்களை இந்தக் கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்று
எளியோரை வலியோர் அடித்தால், வலியோரை வல்லூறு அடிக்காதா.
அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொல்லும்
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்.

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்
பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய சதுஷ்க்ருதாம்
தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

எப்பொழுதெல்லாம் தர்மம் குலைந்து அதர்மம் தலை விரித்தாடுகிறதோ, அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டுவதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், நல்லவர்களை காப்பதற்கும் நான் யுகம் யுகமாக அவதரிக்கிறேன்"
அவதரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது, இன்னொரு 2019 வெற்றியை இந்த பாரதம் தாங்காது.

இன்றைய அரசியல்வாதிகளின் நிலை குறித்து அன்றே அவ்வை கூறியுள்ளார் 

பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்

யாருக்குப் பயம் வரும் ? யாரிடம் தேவை அதிகமாய் இருக்கிறதோ அவர்களுக்கு பயம் அதிகம் இருக்கும்

தேவைகள் அதிகம் ஆகும்போது, அதற்கு நிறைய பணம் வேண்டும். பணம்  சம்பாதிக்க யார்  யாரை எல்லாமோ பார்த்து பல்லை காண்பிக்க வேண்டி இருக்கிறது, எல்லோரிடமும் பயப் பட வேண்டி இருக்கிறது, யார் என்ன செய்வானோ என்ற பயம் பிடித்து ஆட்டும்

மனதிற்குள் வைத்தாலும் வெளியில் ஆசை ஆசையாகப் பேச வேண்டி இருக்கிறது

யாரிடம் என்ன உதவி கேட்கலாம் என்று மனம் கணக்கு போட்டுக் கொண்டே இருக்கிறது

அவ்வையார் சொன்னார்....

பிச்சை எடுப்பது கேவலம்.

அதை விட கேவலமான ஒன்று இருக்கிறது


அது தான், மற்றவர்களிடம் ஆசை வார்த்தை சொல்லி , அவர்களிடம் பலன் பெற்று உயிர் வாழ்வதுஅதை விட சாகலாம் என்கிறார்

No comments: