Wednesday, April 9, 2025

சாதியை ஒழிப்பதற்கு அரசுக்கு சில ஆலோசனைகள்

 1. சாதி சங்கங்கள் தடைசெய்யப்பட்டு  அதன் சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட வேண்டும்.

2. சாதி மறுப்புத் திருமணங்கள் அரசால் ஊக்குவிக்கப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்.

3. சாதி மறுப்புத் திருமணங்கள் செய்தவர்களின் குழந்தைகளுக்கு உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

4. சாதி சான்றிதழ்களில் சாதி பெயர் நீக்கப்பட்டு SC-ST/MBC/BC/OC என்று பிரிவு மட்டும் குறிப்பிடப்பட வேண்டும்.

5. அனைத்து கோவில் அர்ச்சகர் பணியில் SC/ST/MBC/BC/OC அனைத்து பிரிவினருக்கும் தலா 25% இடஒதுக்கீடு செய்து அவர்களின் ஊதியம் உயர்த்தப்பட வேண்டும்.

6. அதே போல ஊராட்சி/நகராட்சி/மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் பணியில் SC-ST/MBC/BC/OC அனைத்து பிரிவினருக்கும் தலா 25% இடஒதுக்கீடு செய்து அவர்களின் ஊதியம் கணிசமாக உயர்த்தப்பட வேண்டும்.

7. சாதியற்றோர் மற்றும் மதமற்றோர் பிரிவை அங்கீகரித்து அரசு சான்றிதழ் வழங்கவேண்டும்.

8. கிராமங்கள் மற்றும் சிறு சிறு ஊர்களில் உள்ள சேரி மற்றும் காலனி என ஊரைவிட்டு வெளியே குடி உள்ளவர்கள் ஊருக்குள் குடி அமர்த்தப்பட்ட வேண்டும்.

9. அனைத்து சாதியினரும் ஒன்றாக வசிக்கும் சமத்துவபுரம் எண்ணிக்கை அனைத்து மாவட்டங்களிலும் உயர்த்தப்பட வேண்டும்.

10. சாதி பெயரில் உள்ள பள்ளி கல்லூரி மற்றும் கடைகள் வங்கிகள் பெயர்கள் மாற்றப்பட வேண்டும்.

11. சுடுகாட்டில் அனைத்து சாதியினருக்கும் ஒரே எரிமேடை பயன்படுத்தப்பட வேண்டும்.

12.சாதி ஒழிப்புக்கு என்று ஒரு தனி அரசுத்துறை உருவாக்கப்பட்டு அதற்கு தனி அமைச்சர் நியமிக்கப்பட்டு அதன் செயல்பாடுகளை மற்றும் ஒவ்வொரு வருடமும் சாதி மறுப்பாளர்கள் எண்ணிக்கை உயர்வதை அரசு கண்காணிக்க வேண்டும்.