தமிழின் இனிமை
|
கனியிடை ஏறிய சுளையும்
-- முற்றல்
கழையிடை ஏறிய சாறும், பனிமலர் ஏறிய தேனும், -- காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும்; நனிபசு பொழியும் பாலும் -- தென்னை நல்கிய குளிரிள நீரும், இனியன என்பேன் எனினும், -- தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்!
|
இன்பத் தமிழ்
|
தமிழுக்கும் அமுதென்று
பேர் ! -- அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் ! தமிழுக்கு நிலவென்றுபேர்! -- இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் ! தமிழுக்கு மணமென்று பேர் ! -- இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் ! தமிழுக்கு மதுவென்று பேர்! -- இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர் ! தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! -- இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் ! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! -- இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் ! தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! -- இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் ! தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! -- இன்பத் தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ |
சங்க நாதம்
|
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்: இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
திங்களொடும்
செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்தமிழுடன் பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே!
சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென்று ஊதூது சங்கே! பொங்கும் தமிழர்க்கின்னல் விளைத்தால் சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு!
வெங்கொடுமைச்
சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள். கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனில்கமழ்ந்து லீரஞ்செய்கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! (எங்) |
வாழ்வில் உயர்வுகொள்!
சேசு முகம்மது என்றும்! -- மற்றும்
சிவனென்றும் அரியென்றும் சித்தார்த்த னென் றும்,
பேசி வளர்க்கின்ற போரில் -- உன்
பெயரையும் கூட்டுவர் நீஒப்ப வேண்டாம்!
காசைப் பிடுங்கிடுதற்கே -- பலர்
கடவுளென் பார்!இரு காதையும் மூடு!
கூசி நடுங்கிடு தம்பி! -- கெட்ட
கோயிலென்றால்ஒரு காதத்தி ல்ஓடு!
ஆய்ந்து பார்!!
|
சாந்தியால் உலகம்
தழைப்பது நன்றா?
சமயபே தம்வளர்த்தே தளர்வது நன்றா? மாந்தரிற் சாதிவகுப்பது சரியா? மக்கள் ஒரேகுலமாய் வாழ்வது சரியா? வாய்ந்தபோர்க் குறிபோல் மதக்குறி இனிதா? மனமொழி மெய்ஒன்றி மகிழுதல் இனிதா? ஆய்ந்துபார் நெஞ்சமே அமைதிதான் சிறப்பா? அண்டை வீட்டைப்பறிக்கும் சண்டைதான் சிறப்பா? |
புதிய உலகு செய்வாம்
|
புதியதோர் உலகம்
செய்வோம் -- கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம். (புதிய) பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம் புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம். (புதிய) இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம் 'இது எனதெ'ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம் (புதிய) உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம் 'ஒருபொருள் தனி,எனும் மனிதரைச் சிரிப்போம்! (புதிய) இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம் ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம் (புதிய) |
நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்
கோலமுழு தும்காட்டி விட்டால் காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ!
காலைவந்த செம்பரிதி கடலில்முழ்கிக்
கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ!
வாளினை எடடா!
|
வலியோர்சிலர்
எளியோர்தமை
வதையே புரிகுவதா? மகராசர்கள் உலகாளுதல் நிலையாம்எனும் நினைவா? உலகாள உனதுதாய்மிக உயிர்வாதை யடைகிறாள்; உதவாதினி ஒருதாமதம் உடனே விழி தமிழா! கலையேவளர்! தொழில்மேவிடு! கவிதைபுனை தமிழா! கடலேநிகர் படைசேர;கெடு விடநேர்கரு விகள்சேர்! நிலமேஉழு! நவதானிய நிறையூதியம் அடைவாய்; நிதிநூல்விளை! உயிர் நூல்உரை நிசநூல்மிக வரைவாய்! அலைமாகடல் நிலம்வானிலுன் அணிமாளிகை ரதமே அவைஏறிடும் விதமேயுன ததிகாரம் நிறுவுவாய்! கொலைவாளினை எடடாமிகு கொடியோர்செயல் அறவே குகைவாழ்ஒரு புலியேஉயர் குணமேவிய தமிழா! தலையாகிய அறமேபுரி சரிநீதி யுதவுவாய்! சமமேபொருள் ஐனநாயகம் எனவேமுர சறைவாய்! இலையேஉண விலையே கதி இலையேஎனும் எளிமை இனிமேலிலை எனவேமுர சறைவாய் முரசறைவாய்! |
வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி
வேண்டும்!
விசைஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
தொகையாக எதிர்நிறுத்தித் தூள்தூ ளாக்கும்
காழ்ச்சிந்தை, மறச்செயல்கள் மிகவும் வேண்டும்!
கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!
கீழ்ச்செயல்கள் விடவேண்டும்! ராவ ணன்தன்
கீர்த்திசொல்லி அவன்நாமம் வாழ்த்த வேண்டும்!
பகை நடுக்கம்
தமிழர் என்று சொல்வோம் - பகைவர்
தமை நடுங்க நடுங்க வைப்போம்
இமய வெற்பின் முடியிற் - கொடியை
ஏற வைத்த நாங்கள் தமிழர் என்று...
நமத டாஇந் நாடு - என்றும்
நாமிந் நாட்டின் வேந்தர்
சமம்இந் நாட்டு மக்கள் - என்றே
தாக்கடா வெற்றி முரசை! தமிழர் என்று...
எந்த நாளும் தமிழர் - தம் கை
ஏந்தி வாழ்ந்த தில்லை
இந்த நாளில் நம் ஆணை - செல்ல
ஏற்றடா - தமிழர் கொடியை. தமிழர் என்று...
வையம் கண்ட துண்டு - நாட்டு
மறவர் வாழ்வு தன்னைப
பெய்யும் முகிலின் இடிபோல் - அடடே
பேரிகை முழக்கு தமிழர் என்று...
தமிழர் என்று சொல்வோம் - பகைவர்
தமை நடுங்க நடுங்க வைப்போம்
இமய வெற்பின் முடியிற் - கொடியை
ஏற வைத்த நாங்கள் தமிழர் என்று...
நமத டாஇந் நாடு - என்றும்
நாமிந் நாட்டின் வேந்தர்
சமம்இந் நாட்டு மக்கள் - என்றே
தாக்கடா வெற்றி முரசை! தமிழர் என்று...
எந்த நாளும் தமிழர் - தம் கை
ஏந்தி வாழ்ந்த தில்லை
இந்த நாளில் நம் ஆணை - செல்ல
ஏற்றடா - தமிழர் கொடியை. தமிழர் என்று...
வையம் கண்ட துண்டு - நாட்டு
மறவர் வாழ்வு தன்னைப
பெய்யும் முகிலின் இடிபோல் - அடடே
பேரிகை முழக்கு தமிழர் என்று...
கூவாய் கருங்குயிலே
எங்கள் திருநாட்டில் எங்கள்நல் ஆட்சியே
பொங்கிடுக வாய்மை பொலிந்திடுக என்றேநீ
செங்கதிர் சீர்க்கையால் பொன்னள்ளிப் பூசிய
கங்குல் நிகர்த்த கருங்குயிலே கூவாயே.
எங்கள் திருநாட்டில் எங்கள்நல் ஆட்சியே
பொங்கிடுக வாய்மை பொலிந்திடுக என்றேநீ
செங்கதிர் சீர்க்கையால் பொன்னள்ளிப் பூசிய
கங்குல் நிகர்த்த கருங்குயிலே கூவாயே.
சிறுத்தையே வெளியில்
வா
பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே சிறகை விரி, எழு!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?
கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்
பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத்
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
நமக்குள் உரிமை தமக்கென் பார்எனில்,
வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!
இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்
புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே
கையி ருப்பைக் காட்ட எழுந்திரு!
குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!
நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு!
பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்! வாழ்வை யுயர்த்துக!
கைக்குள திறமை காட்ட எழுந்திரு!
வாழ்க இளைஞனே, வாழ்க நின்கூட்டம்!
வாழ்கதிராவிட நாடு!
வாழ்க நின்வையத்து மாப்புகழ் நன்றே!
பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே சிறகை விரி, எழு!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?
கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்
பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத்
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
நமக்குள் உரிமை தமக்கென் பார்எனில்,
வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!
இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்
புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே
கையி ருப்பைக் காட்ட எழுந்திரு!
குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!
நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு!
பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்! வாழ்வை யுயர்த்துக!
கைக்குள திறமை காட்ட எழுந்திரு!
வாழ்க இளைஞனே, வாழ்க நின்கூட்டம்!
வாழ்கதிராவிட நாடு!
வாழ்க நின்வையத்து மாப்புகழ் நன்றே!
எங்கள்
உடல் பொருள் ஆவியெல்லாம் -- எங்கள்
இன்பத் தமிழ் மொழிக்கே தருவோம்!
மங்கை ஒருத்தி தரும் சுகமும் -- எங்கள்
மாத்தமிழ்க்கீடில்லை என்றுரைப்போம்! (இந்)
சிங்கமென்றே. இளங் காளைகளே -- மிகத்
தீவிரம் கொள்ளுவீர் நாட்டினிலே!
பங்கம் விளைத்திடில் தாய்மொழிக்கே -- உடற்
பச்சை ரத்தம் பரிமாறிடுவோம்!
இன்பத் தமிழ் மொழிக்கே தருவோம்!
மங்கை ஒருத்தி தரும் சுகமும் -- எங்கள்
மாத்தமிழ்க்கீடில்லை என்றுரைப்போம்! (இந்)
சிங்கமென்றே. இளங் காளைகளே -- மிகத்
தீவிரம் கொள்ளுவீர் நாட்டினிலே!
பங்கம் விளைத்திடில் தாய்மொழிக்கே -- உடற்
பச்சை ரத்தம் பரிமாறிடுவோம்!
மாங்குயில்
கூவிடும் பூஞ்சோலை -- நமை
மாட்ட நினைக்கும் சிறைச்சாலை!
ஏங்கவிடோம் தமிழ்த் தாய்தனையே -- உயிர்
இவ்வுடலை விட்டு நீங்கும் வரை!
மாட்ட நினைக்கும் சிறைச்சாலை!
ஏங்கவிடோம் தமிழ்த் தாய்தனையே -- உயிர்
இவ்வுடலை விட்டு நீங்கும் வரை!
இந்தி எதிர்ப்புப்
பாட்டு
இந்தி புகுந்தது நாட்டிலே -- இன்னும்
என்னசெய்கின்றீர் வீட்டிலே?
மைந்தர்அன்னைதந்தை யாவரும் -- ஒடி
வாருங்கள் போர்எல்லைக் கோட்டிலே
இன்பத்திராவிட நாட்டினை -- உண்டு
ஏப்ப மிடும்ஏற்பாட்டினைப்
பன்முறை யும்செய்து பார்த்தனர் -- இன்னும்
பார்ப்பாரானால் பார்க்கட்டுமே.
செத்த வடமொழி காட்டியும் -- நம்
செந்தமிழ் மேல்எய்த ஈட்டியும்
பொத்தென வீழ்ந்தது பன்முறை -- இந்திப்
பூச்சாண்டி காட்டினர் இம்முறை.
இந்தும தம்என்ற பேச்சையே -- சொல்லி
இன்பத் தமிழன்னை மூச்சையே
கொந்திடப் பார்த்தனர் பன்முறை -- இந்திக்
கொம்பூதி வந்தனர் இம்முறை.
வேதம் வடமொழி என்றனர் -- தமிழ்
வீண்மொழி என்றுபு கன்றனர்
ஏதும்செல்லாதெனக் கண்டபின் -- இன்
றிந்தியைக் கட்டாயம் என்றனர்.
ஆட்சியெலாம்அவர் கையிலாம் -- படை
அத்தனை யும்அவர் பையிலாம்
கோட்டை பிடித்ததும் இந்தியாம் -- நம்
கோடரிக் காம்புகள் கூற்றிவை.
தீந்தமிழ் காணாத சேய்களின் -- பெருஞ்
செல்வத்தை இந்தியின் வாய்களில்
ஈந்தனர் இம்மூட நாய்களின் -- செயல்
ஏற்குமோ இப்பெரு நாட்டிலே.
நாடு நலம்பெற வேண்டுமாம் -- வட
நாட்டிந்தி தான் அதைத் தூண்டுமாம்
பீடுறு செந்தமிழ் நாட்டிலே -- சில
பேடிப் பசங்களின் கூற்றிவை.