Tuesday, December 28, 2010

மாறிய மார்கழி மாதம்

என்னவள் எழுதிய கவிதை இது
 
 
 
அழகிய மார்கழியே அழிந்து விட்டாயே
அட்டகாசம் செய்யும் மனிதர் இனத்தால்
அம்சமாய் இருக்கும் அம்மாவின் வண்ணக்
கோலங்கள் வாசலில் இல்லை நல்ல எண்ணக்
கோலங்கள் யார் மனதிலும் இல்லை
பனிபொழியும் இனிய அந்த மார்கழிக்
காலையில் இருக்கும் அழகு இன்று இல்லை
ஈரம் சொட்டும் கூந்தலுடன் கோவிலுக்குச்
செல்லும் பெண்களும் இன்று இல்லை
தூரத்தில் கேட்கும் சுப்ரபாதமும் அருகில்
உள்ளவரின் குறட்டையால் கேட்கவே இல்லை
ஆசையுடன் அம்மா கொண்டுவரும்
பொங்கலும் சுண்டலும் இல்லவே இல்லை
அதை அதிகாரத்துடன் சண்டையிட்டு
பங்குபோடும் அண்ணனும் இங்கு இல்லை
இவையெல்லாம் வெளிநாட்டில் இருக்கும்
எனக்கும் மட்டுமில்லை உள்ளூரில் உள்ள
உங்களுக்கும் கிடைப்பது இல்லை
 
கால மாற்றத்தால்  
 
மாறிய மார்கழி மாதம்!
 
- அன்புடன்
மாலா குருபிரசாத்