பட்டினத்தார் வாழ்க்கையின் நிலையாமையைப்
பற்றி அழகாகப் பாடி அனைவர் கண்களிலும்
கண்ணீர் வர
வைத்துவிடுவார்.
"அத்தமும்
வாழ்வும் அகத்துமட் டேவிழி அம்பொழுக
மெத்திய மாதரும்
வீதிமட் டேவிம்மி விம்மியிரு
கைத்தலம் மேல்வைத்
தழுமைந் தரும் சுடு காடுமட்டே
பற்றித் தொடரும்
இருவினைப் புண்ணிய பாவமுமே"
என்பது பட்டினத்தார்
பாடல்.
வாழ்க்கை கொடுத்தவள்
உறவு வீட்டோடு
முடிந்துவிடும்.
அன்பொழுக விம்மி
அழும் உறவுகள்
வீதிவரை மட்டுமே
வரும்.
பெற்ற மைந்தர்
சுடுகாடு வரை வருவர்.
நம் பாவ புண்ணியங்கள்
கடைசி வரை
கூட வரும் என்பார்
பட்டினத்தடிகள்.
இந்தப் பாடலின்
தாக்கம் பாத காணிக்கை
என்ற படத்தில்
,
வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை யாரோ...
ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில்
நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா
?
சென்றவனைக்
கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்றுவிடு
என்பான்
No comments:
Post a Comment