Tuesday, March 20, 2018

தமிழ்நாடு இந்துக்களுக்கு எதிரானதா? இல்லை, இந்துத்வாவிற்கு எதிரானது, ஏன் ?

ராமராஜ்ஜியம் ரத யாத்திரை என்னுடைய பார்வை

ஏன் இந்த எதிர்ப்பு தமிழகத்தில் மட்டும்?

தமிழ்நாடு இந்துக்களுக்கு எதிரானதா? இல்லை, இந்துத்வாவிற்கு எதிரானது, ஏன் ?

அறுபத்தி மூன்று நாயன்மார்களும், பன்னிரு ஆழ்வார்களும் பிறந்த மண் இது, பக்தியுடன், மொழியையும் வளர்த்தவர்கள் நாங்கள், தமிழகத்தில் உள்ள இத்தனை பழமையான கோவில்களைப் போல் வேறு எந்த மாநிலத்திலாவது இருக்கிறதா? மிருகமாகத் திரிந்தவனை மனிதனாக்க தோற்றுவிக்கப் பட்டதே மதம், ஆனால் இன்றோ நீங்கள் மதம் பிடித்து மிருகமாகத் திரிகிறீர்கள். எங்களுக்கு பெரியார் பேச்சுக்கு கைதட்டி ரசிக்கவும் முடியும், அப்படியே கோவிலுக்குச் சென்று மனதார வணங்கவும் முடியும், அது தான் பகுத்தறிவு. அது தமிழர்களுக்கே உரித்தானது. இன்று தமிழர்களின் பெயர்க்குப் பின்னால் ஜாதிப் பெயர்  இல்லாமல் இருக்கிறதே, வேறு எந்த மாநிலத்திலாவது இப்படி இருக்கிறதா? தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்கோர் குணமுண்டு என்று சும்மாவா கூறினார்கள் ?

இதே போல, இந்தியாவில் நபி வழி ராஜ்ஜிய ரத யாத்திரை, ஏசு வழி ராஜ்ஜிய ரத யாத்திரை என அனைத்து மாநிலங்களிலும் அமைதியாக ஊர்வலம் போக முடியுமா ?
இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல, இங்கு வாழும் அனைத்து மத, இன மற்றும் மொழி  சார்ந்த மக்களுக்கும் பொதுவான ஒரு மத சார்பற்ற நாடு. நம் முன்னோர்கள் இரத்தம் சிந்தி வெள்ளையர்களிடமிருந்து பெரும் கனவுகளோடு பெற்றுத் தந்த மத சார்பற்ற நமது பாரதத்தை இது போன்ற ரத யாத்திரைகளால் ரத்த பூமியாக மாற்றி விடாதீர்கள்.
நீங்கள் பதவி ஆசை காட்டி தமிழகத்தின் ஆட்சியாளர்களை அடிமைப் படுத்தலாம், ஆனால் தமிழர்களை ஒரு போதும் அடிமைப் படுத்த முடியாது. 

2 comments:

Anonymous said...

தமிழ்நாட்டில் ஷிர்க் மாநாடு என்று இந்துக்களின் மனதை புண்படுத்தினார்களே

Guruprasath said...

எதெல்லாம் மதக் கலவரத்தை தூண்டக் கூடியதோ, அவை அனைத்தும் தடை செய்யப் பட வேண்டியதே, என்னைப் பொறுத்தவரை ISIS ம் RSS ம் ஒன்று தான், இரண்டுமே தீவிரவாத இயக்கம்.