Thursday, March 10, 2011

சந்தோசமாக குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் வாழ கடைபிடிக்க வேண்டியவை

* நானே பெரியவன்,  நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்

* எந்த விஷயத்தையும், பிரச்சனையும் கையாளுங்கள் 

* சில நேரங்களில் சில சங்கடங்களை சந்தித்து ஆகவேண்டும் என்று  உணருங்கள்

* நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்

* குறுகிய மனப்பான்மையை விட்டு ஒழியுங்கள்

* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி கர்வப்படாதீர்கள்

* அளவுக்கு அதிகமாய் தேவைக்கு அதிகமாய் ஆசைபடாதீர்கள்

* எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம்
   உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டு இருக்காதீர்க்ள்

* கேள்வி படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்

* உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாய் இல்லாமல் கொஞ்சம்  தளர்த்திக்கொள்ளுங்கள்

* மற்றக் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக  புரிந்து கொள்ளாதீர்கள்

* புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட   நேரமில்லாததுப் போல் நடந்து கொள்ளாதீர்கள்

* பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும்,
   தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்

* பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும்
  என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்.


இது நான் எழுதியது இல்லை, யாரோ சொன்னது, எனக்குப் பிடித்திருந்ததால்   இதை இங்கே பதிவேற்றியிருகிறேன்.  முயன்று தான் பார்ப்போமே !
- அன்புடன் நண்பன் குரு

Tuesday, February 1, 2011

இந்திய கலாச்சாரத்தின் முக்கியத்துவம் - என்னுடைய பேச்சு

 
ரியாத் செந்தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழாவில் நான் பேசிய தலைப்பு "இந்திய கலாச்சாரத்தின் முக்கியத்துவம்"
 
 

Tuesday, December 28, 2010

மாறிய மார்கழி மாதம்

என்னவள் எழுதிய கவிதை இது
 
 
 
அழகிய மார்கழியே அழிந்து விட்டாயே
அட்டகாசம் செய்யும் மனிதர் இனத்தால்
அம்சமாய் இருக்கும் அம்மாவின் வண்ணக்
கோலங்கள் வாசலில் இல்லை நல்ல எண்ணக்
கோலங்கள் யார் மனதிலும் இல்லை
பனிபொழியும் இனிய அந்த மார்கழிக்
காலையில் இருக்கும் அழகு இன்று இல்லை
ஈரம் சொட்டும் கூந்தலுடன் கோவிலுக்குச்
செல்லும் பெண்களும் இன்று இல்லை
தூரத்தில் கேட்கும் சுப்ரபாதமும் அருகில்
உள்ளவரின் குறட்டையால் கேட்கவே இல்லை
ஆசையுடன் அம்மா கொண்டுவரும்
பொங்கலும் சுண்டலும் இல்லவே இல்லை
அதை அதிகாரத்துடன் சண்டையிட்டு
பங்குபோடும் அண்ணனும் இங்கு இல்லை
இவையெல்லாம் வெளிநாட்டில் இருக்கும்
எனக்கும் மட்டுமில்லை உள்ளூரில் உள்ள
உங்களுக்கும் கிடைப்பது இல்லை
 
கால மாற்றத்தால்  
 
மாறிய மார்கழி மாதம்!
 
- அன்புடன்
மாலா குருபிரசாத்

Monday, December 27, 2010

வரதட்சணைக் கொடுமை

எனது தந்தை எழுதிய கவிதைகளில் ஒரு சில வரிகள்
   
வில்லொடித்து மணம்புரிந்த
ராகவனின் தம்பியர்கள்
இன்று சொல்லடித்து
பணம் கேட்க
அன்னையரைப் பின்தொடர
பணத்திற்கு வழியுமின்றி
பண்பிலே குறையுமின்றி
பாரெங்கும் மலிந்திருக்கும்
பலகோடி சீதையர்கள்!!!